வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-16 18:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 179 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து  ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

மேலும் செய்திகள்