விசாலமான இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுமா?

விசாலமான இடங்களில் நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-06-16 18:27 GMT
விருதுநகர், 
விசாலமான இடங்களில் நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறி மார்க்கெட் 
 விருதுநகரில் மெயின் பஜாரில் உள்ள பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் கொரோனா தொற்றுக்காலத்தில் இப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கடைகள் வைக்கவும், பொதுமக்கள் சென்று காய்கறிகள் வாங்கவும் வாய்ப்பில்லாத நிலையில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
 விருதுநகர் நகராட்சி நிர்வாகம் விருதுநகர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் உழவர் சந்தையில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுத்தது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு அருகே உள்ள நகராட்சி மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது.
 இதேபோன்று மாவட்டத்தில் பிற நகரங்களிலும் காய்கறி மார்க்கெட்டுகள் அமைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு நகராட்சி நிர்வாகத்தினர் காய்கறி மார்க்கெட் டுகளை தற்காலிகமாக பல இடங்களில் மாற்றம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இடமாற்றம் 
இந்நிலையில் மருத்துவர்கள் கொரோனா 3-வது அலை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி பல்வேறு தயார்நிலை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு காய்கறிமார்க்கெட்டுகளை விசாலமான பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி செல்லும் வகையில் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்கிய உடன் அங்கிருந்து காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு 
இவ்வாறு நிரந்தரம் இல்லாமல் ஒவ்வொரு பகுதியாக மாற்றி கொண்டே சென்றால் பொதுமக்களுக்கும் அதே நேரத்தில் காய்கறி வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் மாவட்ட நிர்வாகம் நோய் பாதிப்பு ஏற்படாமல் விசாலமான இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகளை அமைக்கவும் அதே நேரத்தில் பொதுமக்கள் வந்து காய்கறி வாங்கி செல்லும் வகையில் இடத்தை தேர்வு செய்து நிரந்தர காய்கறி கடை அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தற்போது தமிழக அரசு உழவர் சந்தைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் எனஅறிவித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உழவர் சந்தைகளை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாலமான இடங்களில் மார்க்கெட் செயல்படவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்