16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Update: 2021-06-16 18:09 GMT
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே மகாதானபுரம், பகவதி அம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 23), கூலி தொழிலாளி. இவர் ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்