பாணாவரம் அருகே நடந்த கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
பாணாவரம் அருகே நடந்த கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
காவேரிப்பாக்கம்
சோளிங்கரை அடுத்த ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 67), ஓய்வுபெற்ற ெரயில்வே ஊழியர். இவரை கடந்த மே மாதம் 6-ந்தேதி இரவு சிலர் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலை வழக்கு சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா பட்டாபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (38) என்பவர் சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் கடந்த 3-ந்தேதி சரணடைந்தார். அவரை, பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சின்னப்பரெட்டியின் மகன் குமார், அவரின் உறவினர் லட்சுமணன் ஆகியோரை போலீசார் ேதடி வந்தனர். இருவரும், வாலாஜா கோர்ட்டில் கடந்த 11-ந்தேதி சரணடைந்தனர். அவர்களை, பாணாவரம் போலீசார் நேற்று முன்தினம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.