விவசாயி கார் மோதி பலி

விவசாயி கார் மோதி பரிதாபமாக பலியானார்.

Update: 2021-06-16 17:21 GMT
சிவகங்கை,ஜூன்.
திருப்புவனத்தை அடுத்துள்ள வில்லியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை சிவகங்கையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். சிவகங்கை காமராஜர் காலனி அருகே உள்ள சுற்றுச்சாலையில் வரும்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் காரில் வந்தவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்