திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-16 17:19 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்கால் கார்ப்பரேஷன் வங்கி எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

 அப்போது கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு பூவை மாலையாக அணிவித்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் கமலக்கண்ணன், செல்வம், ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்