மண் மாதிரி சேகரிப்பு முகாம்
முதுகுளத்தூர் அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர் நாக ராஜன் மற்றும் திருவரங்கம் உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் ஆரோக்கிய இருதயராஜ் ஆகியோர் முன்னிலையில் இருதயராஜ் என்பவரின் வயலில் மண் மாதிரிகளை சேகரிப்பது தொடர்பான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவ ராமன் உடன் இருந்தார். உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் மண் மாதிரி சேகரிப்பு பற்றிய செயல் விளக்கத்தை செய்து காண்பித்தார்.