திருப்பூர் பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கள்ளக்காதலனை மனைவி அழைத்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

திருப்பூர் பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கள்ளக்காதலனை மனைவி அழைத்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.;

Update: 2021-06-16 16:17 GMT
நல்லூர்
திருப்பூர் பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கள்ளக்காதலனை  மனைவி அழைத்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒரே வீட்டில் வசித்தனர்
மதுரை மாவட்டம், டி.ராமநாதபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சித்ரா என்ற செல்வி (வயது 31). கடந்த 11 வருடத்திற்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிவகாசி பாரப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (50) என்பவருடன் சித்ராவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் திருப்பூர் ராக்கியப்பாளையம் பிரிவு, ஜெய்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். ரமேசிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். ரமேஷ், சித்ராவுடன் வசிப்பது ரமேசின் மனைவிக்கு தெரியவரவே அவர் பலமுறை தொலைபேசியிலும், நேரிலும் வந்து தனது கணவரையும், சித்ராவையும் கண்டித்துள்ளார்.
சந்தேகம்
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி காலை சித்ரா வீட்டில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் பார்த்து திருப்பூர் செல்லம் நகரில் வசிக்கும் சித்ராவின் தாயாருக்கும், நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது சித்ரா வீட்டிற்கு 14-ந் தேதி காலை 4 பேர் காரில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. 
அதன் பின்னர் அரை மணிநேரம் கழித்து சித்ரா இறந்து கிடந்ததும், அவரது முகத்தில் காயங்களும் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் ரமேஷ் சிவகாசியில் இருப்பது தெரியவந்தது. நல்லூர் போலீசார் அங்கு சென்று அவரை குடும்பத்துடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சித்ராவின் வீட்டு அருகில் உள்ள அறிவழகன், 15 வயது சிறுவன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தூக்கில் தொங்கினார்
விசாரணையில் கடந்த 14-ந்தேதி காலை 5.30 மணிக்கு சித்ராவின் வீட்டிற்கு காரில் ரமேசின் மனைவி தனது மகன், மருமகளுடன் வந்து  கணவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ரமேசை அழைத்து கொண்டு காரில் சிவகாசிக்கு சென்றுள்ளனர். அதனை பக்கத்தில் வசிக்கும் அறிவழகன்  பார்த்துள்ளார். 
அவர்கள் சென்று அரைமணிநேரம் கழித்து சித்ரா வீட்டு அருகில் உள்ள கழிவறைக்கு அறிவழகன் சென்றபோது சித்ரா சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் உள்ள 15 வயது சிறுவனிடம் கூறி இருவரும் சித்ராவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது சித்ராவின் உடல் தலை குப்புற சுவரில் உரசி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் சித்ராவுக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. 
 சாவு
இதுகுறித்து சிறுவன் ராக்கியப்பாளையம் பிரிவில் வசிக்கும் சித்ராவின் அண்ணன் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அவர் ஆட்டோ மூலம் நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு, அதன் பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சித்ரா இறந்தது தெரியவந்தது. 
இது குறித்து இறப்பில் சந்தேகம் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய நல்லூர் போலீசார், சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை இறக்கும் போது  கீழே விழுந்ததில் சித்ராவின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்