குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

Update: 2021-06-16 16:08 GMT
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான குழாய் மூலம் உடுமலை நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குடிநீர் ஆங்காங்கு உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து பகிர்மான குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் யு.கே.சி.நகர், வாசவி நகர், அவிணாண்டீஸ்வரர் லே-அவுட், ஏரிப்பாளையம், வி.ஜி.ராவ் நகர், திருப்பூர் சாலை, ஆர்.கே.ஆர்.வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. ரவுண்டானா அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நேற்று நகராட்சி பணியாளர்கள் மூலம் நடந்தது. குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்