காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடக்கத்தில் அச்சம் அடைந்திருந்த பொதுமக்கள் பின்னர் ஆர்வத்துடன் முன்வந்தனர். இந்த நிலையில காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது குறைந்த அளவில் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதால் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என 30 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.