தம்பதியை தாக்கிய 20 பேர் மீது வழக்கு

திசையன்விளை அருகே தம்பதியை தாக்கிய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-15 19:55 GMT
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 52). இவர் உறுமன்குளம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மது போதையில் இருந்தவர்களை ஓரமாக செல்லும் படி கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பெட்டைகுளத்தை சேர்ந்த அருள் (26), மாதேஷ் (22), ஜோயல் (20), இஸ்ரவேல் (21) உள்பட 20 பேர் சுப்பையாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சுப்பையாவின் மனைவி முத்து வள்ளியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து அருள் உள்பட 20 பேரையும் தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்