ஆர்ப்பாட்டம்

மாவட்டத்தில் 15 இடங்களில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-15 19:48 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் 15 இடங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருத்தங்கல், திருச்சுழி, கீழராஜகுலராமன், மல்லாங்கிணறு, ஆலங்குளம், வன்னியம்பட்டி, செட்டியார்பட்டி, சேத்தூர் உள்பட 15 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 240 பேர் கலந்து கொண்டனர். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், காரை கயிறு கட்டி இழுத்து வந்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்