பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள குடிசேரியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). இவர் பேரையூர்-சாப்டூர் ரோட்டில் கட்டாரபட்டி என்ற இடத்தில் தனது மாட்டுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், பால்பாண்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.