மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-15 19:38 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்பிக்நகர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தெற்கு கோவங்காடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 36) என்பதும், விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்