திருச்சி மாவட்டத்திற்கு 23,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது; இன்று முதல் மீண்டும் செலுத்தப்படுகிறது

திருச்சி மாவட்டத்திற்கு 23,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது. அவை இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.;

Update: 2021-06-15 19:36 GMT
திருச்சி, 
திருச்சி மாவட்டத்திற்கு 23,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது. அவை இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்திற்கு கடந்த 12-ந் தேதியன்று 14,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வந்தது. அவை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டது.

அவை, அன்றைய தினம், அதாவது ஒரே நாளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு தீர்ந்து விட்டது. இந்த நிலையில் நேற்று காலை தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்து விட்டதாகவும், அவை பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருச்சியில் தெரிவித்தார்.

23,500 டோஸ் வருகை

அதன்படி, திருச்சி மாவட்டத்திற்கு 3 நாட்கள் இடைவெளிக்கு பின் 19 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசியும், 4,500 கோவேக்சின் டோஸ் தடுப்பூசியும் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அவை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் பிரித்து அனுப்பட்டது.

அந்த தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறியதாவது:-

இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படும்

திருச்சி மாவட்டத்திற்கு மொத்தம் 23,500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று (அதாவது நேற்று) இரவு வந்து விட்டது. அவற்றில் திருச்சி மாநகராட்சிக்கு 5,500 டோஸ் தடுப்பூசி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 3 ஆயிரம் கோவிஷீல்டு, 2,500 கோவேக்சின் தடுப்பூசி ஆகும்.

மீதம் உள்ள தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சில இடங்களில் சிறப்பு முகாம் அமைத்தும் பொதுமக்களுக்கு இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தொடர்ந்து 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் என 4 கோட்ட அலுவலங்களிலும், 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செலுத்தப்படுகிறது. ஊரக பகுதியில் நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி, சிறுகாம்பூர், புதூர்உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், மேட்டுப்பாளையம், வீரம ச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம் ஆகிய 14 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களிலும் தடுப்பூசி வழங்கப்ப டும். கொரோனா தடுப்பூசி போட விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் இம்முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்