ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம்- 14 வகை மளிகை பொருட்கள் வினியோகம்

ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வழங்கினர்.

Update: 2021-06-15 19:12 GMT
ஆறுமுகநேரி:
ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2-வது தவணை கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் அருகே மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை ஒட்டியுள்ள ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரமும் மற்றும் மளிகை பொருட்கள் பையை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சேதுக்குவாய்த்தான் ரேஷன் கடையிலும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்ச்சியில், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், தாசில்தார் முருகேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி அபுல்காசிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்