அமைச்சர் செந்தில்பாலாஜி மீது யூடியூப்பில் அவதூறு பரப்பியவர் கைது

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது யூடியூப்பில் அவதூறு பரப்பியவர் கைது

Update: 2021-06-15 18:15 GMT
கரூர்
கரூர்
கரூரில் கடந்த மார்ச் மாதம் நடந்த தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆற்றில் மணல் அள்ளலாம் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதையடுத்து தி.மு.க. வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவதாகவும், காவிரி ஆற்றில் ஏராளமான மாட்டு வண்டிகள் மணலுடன் இருப்பது போன்றும் வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகின.இதுதொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு கடந்த மே மாதம் 8-ந் தேதி செந்தில்பாலாஜி அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பே மணல் அள்ள உத்தரவிட்டதாகவும், அதன்படி கரூர் மாவட்ட ஆற்றில் மணல் அள்ளப்படுவதாகவும் யூடியூப்பில் வீடியோக்களை சாட்டை முருகன் என்கிற துரைமுருகன் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்தார்.ஏற்கனவே முன்னாள் முதல்வர் குறித்து அவதூறாக சித்தரித்த வழக்கில் கைதாகி திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறையில் உள்ள சாட்டை முருகனை கரூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் இவ்வழக்கின் கீழ் கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நேற்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து லால்குடி கிளை சிறையில் சாட்டை முருகன் மீண்டும் நேற்று அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்