பெண் மீது தாக்குதல்; 3 பேர் கைது

பூவந்தி அருகே பெண்ணை மீது தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-15 18:01 GMT
திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது கோட்டை பூவந்தி பகுதி. இந்த பகுதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி முத்துராக்கு.. மடப்புரம் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இருவரது வயல்களும் அருகருகே உள்ளன.. இந்த நிலையில் முத்துராக்கு தனது வயலில் அளவு செய்து கல் ஊன்றியுள்ளார். இதுகுறித்து பொன்னுச்சாமி, அவரது சகோதரர்கள் ராமநாதன், பொண்ணு பாண்டி, மற்றும் புவனேந்திரன், பாண்டி, தனபால் ஆகிய 6 பேரும் சேர்ந்து கல்லை தங்கள் பகுதியில் ஊன்றியுள்ளதாக தகராறு செய்து பிடுங்கி போட்டுள்ளனர். இதுகுறித்து முத்துராக்கு கேட்டதற்கு அவரை தாகாத வார்த்தையால் பேசி கையால் அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துராக்கு பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து பெண்ணை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். இது தொடர்பாக ராமநாதன், புவனேந்திரன், பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்