6 பேரை வெட்டியது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் பதுக்கியவர் மீது புகார் கொடுத்தது தொடர்பாக 6 பேரை வெட்டியது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Update: 2021-06-15 17:38 GMT
நயினார்கோவில், 
மதுபாட்டில் பதுக்கியவர் மீது புகார் கொடுத்தது தொடர்பாக 6 பேரை மண்வெட்டியால் வெட்டியது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
புகார்
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்றதாக கடந்த மே மாதம் நயினார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் முனியசாமி மகன் சதீஷ்குமாரின் வீட்டில் 720 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்தநிலையில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து புகார் செய்ததாக காளிமுத்து மகன் அன்பழகன், அன்பழகன் மகன் ராஜ்குமார், அன்பழகன் மகன் மகமு, சுப்பிரமணியன் மகன் குமார் உள்பட 6 பேரை மண்வெட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கினர். மேலும் ராஜ்குமாரின் வேன் சேதப்படுத்தப்பட்டது. 
விசாரணை
இதில் படுகாயம் அடைந்த 6 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நயினார்கோவில் காவல் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 15 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்