ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி செம்மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக டிராக்டரில் வந்த மாடக்கொட்டான் நாகராஜ் மகன் தினேஷ் (வயது23), பேராவூர் சமயமுத்து மகன் சுரேஷ் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக டிராக்டர் உரிமையாளர் மாடக்கொட்டான் ராஜேந்திரன் மகன் தீபக் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.