காட்டுமன்னார்கோவில் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

காட்டுமன்னார்கோவில் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானாா்.;

Update: 2021-06-15 17:25 GMT

காட்டுமன்னார்கோவில், ஜூன்.16-
குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் மணிவண்ணன் (வயது 35), கூலித்தொழிலாளி. 


இவர் நேற்று முன்தினம் இரவு அதேஊரை சேர்ந்த ரவிச்சந்திரன் (41) என்பவருடன் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டைக்கு சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

 மணிவண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லால்பேட்டை காங்கிருப்பு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.


இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்