ஆட்டோ மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது
ஆட்டோ மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் கூரிராஜன் மகன் கார்த்திக் (வயது24), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது அண்ணன் குமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் குமரையா கோவில் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டிற்கு பால் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொம்மை குரு உள்ளிட்டோர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார்களாம். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து புளிக்காரத்தெருவை சேர்ந்த ராஜா மகன் பால முருகன் (23), முனியசாமி மகன் மணிகண்டன் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பொம்மை குருவை தேடிவருகின்றனர்.