கோத்தகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் இணையவழி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி
கோத்தகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் இணையவழி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
கோத்தகிரி
கோத்தகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இணைய வழியில் இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு கோத்தகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
பயிற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மை துறை பேராசிரியர் சுகந்தி இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை இடுபொருட்கள், பஞ்சகாவியம், தசகாவ்யம், 3ஜி கரைசல் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள், அங்கக சான்றளிப்பு துறையின் கீழ் விவசாயிகள் தங்களை பதிவு செய்யும் முறைகள் குறித்து பேசினார்.
இதில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.