மேலும் 77 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கோவை வந்தது
மேலும் 77 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கோவை வந்தது
கோவை
கோவை மாவட்டத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் 1,979 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதேபோல் கொடிசியா உள்ளிட்ட கொரோனா தற்காலிக சிகிச்சை மையங்களில் 465 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.
தனியார் ஆஸ்பத்திரியில் 3,035 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கின்றன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து, தற்போது வரை சுமார் 3,500 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வடமாநிலங்களில் இருந்து ரெயில் கன்டெய்னர்கள் மூலம் கோவைக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவையை அடுத்த இருகூருக்கு நேற்று காலை 7.25 மணிக்கு 4 கன்டெய்னர் அடங்கிய ரெயிலில் 77.78 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது.
தமிழ்நாட் டிற்கு இதுவரை 5434.14 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது. இந்த ஆக்சிஜன், கன்டெய்னர் லாரி மூலம் கோவையில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.