கீழ்நகர் கிராமத்தில் ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு
கீழ்நகர் கிராமத்தில் ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மணி என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசு மாடு கடந்த 14-ந் தேதி ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்