அவினாசி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
அவினாசி அருகே வேனில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்;
அவினாசி
அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் நேற்று அவினாசியை அடுத்த தெக்கலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி அவ்வழியே வேகமாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் வேனை ஓட்டி வந்தவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது23) என்பதும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து 750 மில்லி அளவுள்ள 20 மதுபாட்டில்களை வேன் கேபினுக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தற்போது திருப்பூரில் மதுக்கடைகள் இல்லை என்பதாலும் அதை திருப்பூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வாங்கிவந்தது தெரியவந்தது. அத்துடன் போதை அதிகரிப்பதற்காக மதுபாட்டில்களில் மேலும் சில திரவியங்களை கலந்துகொண்டுவந்ததும் தெரியவந்தது. எனவே சட்டவிரோதமாக மது கடத்தியதாக அவர் மீது வழக்குபதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.