திருமழிசை, மப்பேடு சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக திருமழிசை, மப்பேடு சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை செய்யப்படும். இதுகுறித்து திருவள்ளூரை அடுத்த திருமழிசை மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருமழிசை கோட்டத்திற்குட்பட்ட பிரயாம்பத்து, எம்.ஜி.ஆர்.நகர், ஜவகர் தெரு, மேட்டுத்தாங்கள், வெள்ளவேடு, நேமம், உக்கோட்டை, செட்டிப்பேடு சாலை, குத்தம்பாக்கம், நரசிங்கபுரம், சமத்துவபுரம், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், சிவபுரம், மாரிமங்கலம், பேரம்பாக்கம் பஜார், தொட்டிக்கலை, கல்யாண குப்பம், சிறுகளத்தூர், புலியூர் கண்டிகை, வீரராகவபுரம், தண்டலம், கிளாம்பாக்கம், கோமதிபுரம், சரஸ்வதி நகர், நெமிலிச்சேரி, ராமதாபுரம், ஈ.வி.பி டவுன், ஸ்ரீநாத் நகர் போன்ற பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 2 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்ரீ பெருமந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மப்பேடு துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு ணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மப்பேடு மேட்டுக்கடை, விஸ்வநாதபுரம், அழிஞ்சிவாக்கம், செங்காடு, சமத்துவபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.