கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு
கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தி, அதகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ரோஸ் காட்டேஜ், அரவேனு தவிட்டுமேடு, ஓரசோலை காமராஜர்நகர், கன்னிகா தேவி காலனி ஆகிய கிராம பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளில் நேற்று நீலகிரி மாவட்ட ஆயத்தீர்வை உதவி ஆணையர் மணி ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் 14 நாட்களுக்கு அந்த பகுதியை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.