மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.;

Update: 2021-06-14 22:07 GMT
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ந் ேததி தண்ணீர்் திறந்து விடப்பட்டது. அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து தினமும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,170 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று 14-ந் தேதி வினாடிக்கு 696 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 96.33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 95.66 அடியாக குறைந்துள்ளது ஒரே நாளில் ½ அடி குறைந்துள்ளது. தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்