திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகினர்

Update: 2021-06-14 21:46 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 378 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 65,429 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 824 நோயாளிகள் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 59,627 ஆகும். ஆனால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 11 பேர் உயிரிழந்தனர்.  இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 5,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்