மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வருகை

1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன

Update: 2021-06-14 21:23 GMT
திருச்சி
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட வில்லை. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10, 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை தமிழக அரசு அச்சிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி திருச்சி மாவட்டத்திற்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு அவை மேலூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது.தற்போது நடப்பு கல்வியாண்டுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்க இருப்பதால் குடோனில் உள்ள பாடப்புத்தகங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி ஆகிய 4 கல்வி மாவட்டங்களுக்கும் தனித்தனியாக பிரித்து நேற்று லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்