இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-06-14 20:24 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்த குணசேகரனின் மகள் கிருஷ்ணவேணி(வயது 20). டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கண் விழித்து பார்த்தபோது கிருஷ்ணவேணியை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து குணசேகரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்