மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது

மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது.;

Update: 2021-06-14 20:23 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கண்ணகி (வயது 50). இவர் தனது வயலில் சொந்தமாக கறவை மாடு வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு பின்னால் உள்ள வயல் பகுதியில் காற்று பலமாக வீசி உள்ளது. அப்போது மின் கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து கறவைமாடு மீது விழுந்துள்ளது. இதில் மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மாடு செத்தது. இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்