புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம்

காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

Update: 2021-06-14 18:40 GMT
காரைக்குடி,

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நவீன வசதிகளுடன், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அலுவலகம் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து குத்துவிளக்கினை ஏற்றி வைத்தார். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, தி.மு.க. நகரச்செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் களஞ்சியம், மாநில மகளிர் அணி துணை தலைவி ஸ்ரீவித்யாகணபதி, நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்