வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 யூனியன்களில் பணியாற்றி வந்த 20 ஆணையாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,ஜூன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 யூனியன்களில் பணியாற்றி வந்த 20 ஆணையாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அதிரடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்களான ஆணையாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ராமநாதபுரம் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் (பயிற்சி) கணேஷ்பாபு மண்டபம் யூனியன் கிராம ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றிய சண்முகநாதன் பரமக்குடி கிராம ஊராட்சிக்கும், பரமக்குடி யூனியனில் வட்டார ஊராட்சியில் பணியாற்றிய செந்தாமரை செல்வி மண்டபம் வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றிய செல்லம்மாள் முதுகுளத்தூர் கிராம ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றிய மங்களேஸ்வரி ராமநாதபுரம் கூடுதல் வட்டார வளர்ச்சி (பயிற்சி) அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பரமக்குடி கிராம ஊராட்சி அலுவலர் ராஜேந்திரன் திருப்புல்லாணி வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றிய பாண்டி திருவாடானை வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றி வந்த மேகலா திருப்புல்லாணி கிராம ஊராட்சிக்கும், அந்த பணியிடத்தில் இதுவரை பணியாற்றி வந்த அண்ணாத்துரை போகலூர் வட்டார ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போகலூர்
போகலூர் வட்டார ஊராட்சி அலுவலராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் பரமக்குடி வட்டார ஊராட்சிக்கும், கடலாடி வட்டார ஊராட்சி அலுவலர் அன்புகண்ணன் திருவாடானை கிராம ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றிய உம்முல் ஜாமியா கடலாடி கிராம ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றிய பாண்டி கடலாடி வட்டார ஊராட்சிக்கும், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா லூர்துமேரி ஆர்.எஸ்.மங்கலம் வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றி வந்த சாவித்ரி கமுதி வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றி வந்த அப்துல்ஜப்பார் கலெக்டர் அலுவலக தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, ராமநாதபுரம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் நயினார்கோவிலுக்கும், அங்கு பணியாற்றி வந்த சேவுகப்பெருமாள் ராமநாதபுரம் கிராம ஊராட்சிக்கும், போகலூர் கிராம ஊராட்சியில் பணியாற்றும் மல்லிகா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அந்த இடத்தில் பணியாற்றிய ராஜேந்திரன் போகலூர் கிராம ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.