விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-14 18:15 GMT
விளாத்திகுளம்:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், தொடர்ந்து விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.ஆறுமுகம், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஜோதி, அர்ச்சனை பெருமாள், சேகர், நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்