கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து சிறுவன் சாவு

கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலியானார்.

Update: 2021-06-14 18:13 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன்வலசையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரின் மகன் சுரேஷ் (17). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் சோழசிராமணியில் இருந்து சித்தாளந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை மணிகண்டன் ஓட்டினார். சுரேஷ் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். வழியில் பெருங்குறிச்சி என்ற இடத்தில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சுரேசை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்