லாரியில் கூழாங்கற்கள் கடத்தல்; டிரைவர் கைது
லாரியில் கூழாங்கற்கள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் காட்டுக்கூடலூர்- மடப்பள்ளி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி மகன் சதீஷ் ( வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக காரில் வந்த ஒருவர் மற்றும் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் தங்களது வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதையடுத்து லாரி, மற்றும் கார், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.