கார் மோதி வாலிபர் சாவு

திருப்பத்தூர் அருகே கார் மோதி வாலிபர் இறந்தார்.;

Update: 2021-06-14 17:28 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே சிங்கம்புணரி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் கனிமுகமது மகன் அமீர்கான் (வயது 22). அதே ஊரை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன்(22).இவர்கள் இருவரும் நேற்று மதியம் சிங்கம்புணரியில் இருந்து தேவிபட்டினத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருப்பத்தூர் அடுத்த சிராவயல் மஞ்சுவிரட்டு பொட்டல் அருகே சென்ற எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமீர்கான் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சரவணன் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் ரெத்தினமயிலை ராஜனை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்