இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது
இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது
திருப்பூர்
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநிலத் துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில் அரசு, டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. இது மேலும் கொரோனாவை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் அதிகப்படியான மரணம் ஏற்பட்டுள்ளது. பலர் இன்னும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். எனவே ஊரடங்கு காலத்தில் மதுக்கடையை திறப்பதற்கான அரசாணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மதுக்கடைகளை திறக்க கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.