தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தேனி அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-14 17:12 GMT
தேனி: 

தேனி அருகே கோடாங்கிபட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெயராஜ் மகன் கருப்பசாமி (வயது 27). கூலித்தொழிலாளி. 

இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. கருப்பசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

 இதனால், அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், அவருடைய மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவருடைய தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்