புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.
புதுக்கோட்டை, ஜூன்.15-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.
மாணவர் சேர்க்கை
கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி, ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. தொற்று பரவல் காரணமாக பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
தொற்று பாதிப்பு மற்றும் மாணவர்களின் நலன் கருதி அரசு முக்கிய முடிவு எடுக்கும். இந்த நிலையில் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு அறிவித்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும், அரசின் அறிவுறுத்தல் படியும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. புதுக்கோட்டையில் ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர மாணவிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர். சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
பாடப்பிரிவு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 9-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படியில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மதிப்பெண் குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட பாடப்பிரிவை கேட்ட மாணவிகளிடம் ஆசிரியர்கள் குழுவினர் கேள்வி கேட்டு பதில் அளிக்க கூறினர். இதன் அடிப்படையிலும் அவர்களுக்கு பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டன். இதேபோல மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மற்ற வகுப்பினருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.