திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 16 ஆயிரத்து 600 டோஸ் தடுப்பூசி வந்தது.

திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 16 ஆயிரத்து 600 டோஸ் தடுப்பூசி வந்தது.

Update: 2021-06-14 17:03 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 16 ஆயிரத்து 600 டோஸ் தடுப்பூசி வந்தது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
16 ஆயிரத்து 600 டோஸ் வருகை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி கேட்டனர். அதன்படி சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 16 ஆயிரத்து 600 டோஸ் ஒதுக்கப்பட்டு வந்தது. இதில் கோவேக்சின் 5 ஆயிரத்து 100 டோசும், கோவிஷீல்டு 11 ஆயிரத்து 500 டோசும் ஆகும். இந்த தடுப்பூசிகள் மாவட்டம் முழுவதும் நேற்று போடும் பணி தீவிரமாக நடந்தது.

மேலும் செய்திகள்