கொரோனா தடுப்பூசி முகாம். அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

கொரோனா தடுப்பூசி முகாம். அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

Update: 2021-06-14 17:01 GMT
அரக்கோணம்

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரக்கோணம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். கிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுனரும், கல்வி நிறுவன செயலாளருமான ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையாளர் ஆசிர்வாதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவன மேலாளர் குமார், முதல்வர் சுரேஷ், அலுவலர் கோபிநாத் விரிவுரையாளர்கள் சுந்தரலிங்கம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் செய்தனர். 

மேலும் முகாமில் 360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
தொடர்ந்து அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்