பட்டா கத்தியுடன் சுற்றிய 6 வாலிபர்கள் கைது

பட்டா கத்தியுடன் சுற்றிய 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-14 16:58 GMT
ராமேசுவரம்,ஜூன்.
ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 6 பேரை தனிப்பிரிவு போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் பட்டா கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அந்த 6 பேரையும் பிடித்து நகர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் காரைக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 24), சுரேஷ்குமார் (23), சத்தியநாராயணன் (19) மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஸ்வரன் (20), ராமேசுவரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (19) என்பது தெரிய வந்தது.நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கத்தியுடன் ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். அந்த 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்