நிலக்கோட்டையில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
நிலக்கோட்டையில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகை திருடுபோனது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சென்ராயன் நகரில் குடியிருப்பவர் அய்யனார். அவருடைய மனைவி ஜோதி (வயது 50). இவர், வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று மகள் ரெசிகாவுடன் ஜோதி தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டுக்கு வந்த ஜோதி, கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. மதுரைக்கு சென்றதை நோட்டமிட்டு, ஜோதியின் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.