திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2021-06-14 15:42 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெட் வளாகத்தில் தார்ப்பாய்கள், கூரைகள் மூலம் பந்தல் போன்று அமைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில் மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதாரத்துறையினர் நேற்று பூ மார்க்கெட் வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மார்க்கெட் வளாகத்தை ஆக்கிரமித்து தார்ப்பாய்கள், கூரைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த பந்தல்களை அகற்றினர். மேலும் அவற்றை அமைத்தவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதேபோல் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி கடைகள் அமைக்கப்பட்டு பூக்கள் வியாபாரம் நடப்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சமூக இடைவெளியுடன் கடைகளை மாற்றி அமைத்து, பூக்களை விற்பனை செய்யும்படி வியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன் பேரில் வியாபாரிகளும் கடைகளை மாற்றி அமைத்து பூக்கள் விற்பனையில் ஈடுபட்டனர். 
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பூ மார்க்கெட்டை சேர்ந்த 6 முகவர்கள் மூலம் தான் வியாபாரிகள் நெருக்கமாக கடைகளை அமைத்து பூக்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 6 பேருக்கும் தலா ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்