போளூர் சிறைச்சாலை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது

போளூர் சிறைச்சாலை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது;

Update: 2021-06-14 12:08 GMT
போளூர்

போளூரை அடுத்த மண்டகொளத்தூரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 24). அவரின் தங்கையின் கணவரான வெங்கடேசன் என்பவரை வழக்கு ஒன்றில் போளூர் போலீசார் சமீபத்தில் கைது செய்து போளூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். அவரை, பார்க்க மருதுபாண்டி நேற்று காலை போளூர் கிளை சிறைச்சாலைக்கு வந்தார்.

அங்கிருந்த போலீசார் கொரோனா தொற்று பரவலால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி தனது மோட்டார்சைக்கிளில் பெட்டியில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து சிறைச்சாலை முன்பு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தகவல் அறிந்ததும் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டுச் சென்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்