ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் தமிழக அரசுக்கு வெள்ளையன் கோரிக்கை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-06-14 05:37 GMT
பெரம்பூர், 

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனாலும் சிறிய கடைகளை திறக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை.இந்தநிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று, சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சியால் இது சாத்தியமாயிற்று. இதற்காக தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தற்போது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற உள்ள காரணத்தினால் ஆயிரம் சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள துணிக்கடைகள் மற்றும் நகை கடைகளை திறக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தற்போது வணிகர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் சிறு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். டீ கடைகளில் நின்று பொதுமக்கள் டீ குடிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்