புழல் சிறை கைதி திடீர் சாவு
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
செங்குன்றம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 56). இவர், 2019-ம் ஆண்டு சென்னை யானைகவுனி போலீசாரால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த மாதம் 24-ந் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவனேசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி சிவனேசன், மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.